கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

திருவாரூரில் நூலகம் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி

திருவாரூர் டிரினிட்டி பள்ளியில் மாவட்ட வாசிப்பு இயக்கம் சார்பில், நூலகம் ஓர் அறிமுகம் என்னும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :3 செப்டம்பர் 2018, 7:48 pm

திருவாரூர் டிரினிட்டி பள்ளியில் மாவட்ட வாசிப்பு இயக்கம் சார்பில், நூலகம் ஓர் அறிமுகம் என்னும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளியின் இயக்குநர் வரதராஜன்  தலைமை வகித்தார். இதில் வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆசைத்தம்பி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, 6 முதல் 12 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தனித்தனி வகுப்புகள் மூலமாக நூலகத்தின் சேவைகளையும் புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை குறித்தும் மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார். அத்துடன் காணொளி காட்சி மூலம் நீதிக்கதைகள் மற்றும் தலைவர்கள் வரலாறு குறித்து விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் இந்துமதி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.