திருவாரூரில், சென்னை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை மூலம் பணிபுரியும் நேர்முக உதவியாளர்கள், நிர்வாக அலுவலர்கள் நிலையிலான அலுவலர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த முன்னோடி பயிற்சி வகுப்பை, மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்த பயிற்சியானது, நேர்முக உதவியாளர்கள், நிர்வாக அலுவலர்கள் நிலையிலான அலுவலர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த முன்னோடி பயிற்சியாக செப். 3, 4 ஆகிய தேதிகளிலும், கண்காணிப்பாளர் நிலையிலான அலுவலர்களுக்கு அலுவலக நடைமுறைகள் குறித்த குறுகிய கால பயிற்சியாக செப். 5, 6, 7 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது. இதில் துறையின் ஆய்வு அலுவலர் (பயிற்சி இயக்குநர்) சா. ரெகொபெயாம், பிரிவு அலுவலர் ப. ஜெகதீஷ், பயிற்சியாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பயிற்சி வழங்குகின்றனர். இதில் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர், துணை ஆய்வுக்குழு அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புத்த பூர்ணிமா - அன்பின் நிறைவு

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் தேரோட்டம்

வேடிக்கை பார்க்கும் 'ஆம் ஆத்மி'!

துலா ராசிக்கு பாராட்டு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

