வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பெருகவாழ்ந்தானில் என்.எஸ்.எஸ். மாணவர்கள் தூய்மைப் பணி

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மன்னார்குடியை அடுத்துள்ள பெருகவாழ்ந்தான் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் சனிக்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது.

Updated On :3 செப்டம்பர் 2018, 7:48 pm

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மன்னார்குடியை அடுத்துள்ள பெருகவாழ்ந்தான் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் சனிக்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் பாலதண்டாயுதம் தலைமை வகித்தார். முகாமை, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி.எஸ்.ஆர். தேவதாஸ் தொடங்கி வைத்தார்.
பெருகவாழ்ந்தான் அண்ணாசிலை சந்திப்பு, கடைவீதி, பேருந்து நிலையம், பட்டுக்கோட்டை சாலை, முத்துப்பேட்டை - மன்னார்குடி பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் என்.எஸ்.எஸ்.  மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களிடமும், வியாபாரிகளிடமும் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில், முன்னாள் ஆசிரியர் சந்திரசேகரன், என்.எஸ்.எஸ்.  திட்ட அலுவலர் முத்துசிவா, முன்னாள் திட்ட அலுவலர் ராமு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.