கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டிஉதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

ஆசிரியர் செம்மல் விருது பெற்றவருக்குப் பாராட்டு

ஆசிரியர் செம்மல் விருது பெற்ற திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியருக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

ஆசிரியர் செம்மல் விருது பெற்ற திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியருக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வு அறிஞர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என 84 பேருக்கு, மாணவர் மேம்பாடு மற்றும் கல்வி வளர்ச்சி சமுதாய நலன் ஆகிவற்றிற்காக பணியாற்றியதற்கான ஆசிரியர் செம்மல் விருதுகள் வழங்கப்பட்டன.
 சென்னை மயிலாப்பூரில் உள்ள  டாக்டர் இராதாகிருஷ்ணன் இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்ற இவ்விழாவில், சென்னை உயர்நீதிமன்ற 
நீதியரசர் வீ.பாரதிதாசன் இவ்விருதுகளை வழங்கி கௌரவித்தார். இவ்விருது பெற்ற 84 பேரில், திருவாரூர் வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஆர்.செந்தில்குமாரும் ஒருவராவார்.
இதையொட்டி, இவருக்கு அப்பள்ளித் தாளாளர் எம்.வடுகநாதன், தலைமை ஆசிரியர் ஜி.ஜீவானந்தம், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆர்.ரமேஷ் மற்றும் உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.