
கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் அதிமுக வெற்றி: அமைச்சர் ஆர். காமராஜ் வாழ்த்து
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் கட்டக்குடி தொடக்க வேளாண்மை
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் கட்டக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நிர்வாகக்குழு உறுப்பினர் தேர்தலில், அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
மணலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் கட்டக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகியவற்றின் நிர்வாகக்குழு உறுப்பினர் தேர்தல் செப். 3-ஆம் தேதி நடைபெற்றது. இதில், மணலி கூட்டுறவு வங்கி நிர்வாக்குழு உறுப்பினர் பொறுப்புக்கு அதிமுக சார்பில் 11 பேர், திமுக கூட்டணி சார்பில் 11 பேர், சுயேச்சையாக 8 பேர் என மொத்தம் 30 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதேபோல், கட்டக்குடி கூட்டுறவு வங்கி நிர்வாகக்குழு உறுப்பினர் பொறுப்புக்கு அதிமுக சார்பில் 11 பேர், திமுக கூட்டணி சார்பில் 11 பேர் என 22 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
வாக்கு எண்ணிக்கை அந்தந்த கூட்டுறவு சங்கங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை நடைபெற்றது. மணலி கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்ட 10 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதன்படி, அதிமுக வேட்பாளர்கள் பாலசுப்ரமணியன் 701 வாக்குகள், மாரிமுத்து 700, ராஜேந்திரன் 661, ராமகிருஷ்ணன் 649, ராமலிங்கம் 667, சிங்காரவேலு 641, கமலா 711, எம். சுமித்ரா 697, ஆர். சுமத்திரா 705, முருகேசன் 756 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். இதேபோல், கட்டக்குடி கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் மாசிலாமணி 250 வாக்குகள், இளமாறன் 239, கலியபெருமாள் 254, அமுதாதேவி 243, பிச்சைக்கண்ணு 242, டேவிட்ராஜ் 241 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று, பெரும்பான்மை இடங்களைப் பிடித்தனர். மீதமுள்ள இடங்களில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பரிமளா 214 வாக்குகள், புவாணி 213, கலா 225, தங்கமணி 258, அருமைராஜ் 250 வாக்குகள் பெற்று தேர்வு செய்யப்பட்டனர். அதேவேளையில், பெரும்பான்மை இடங்களை அதிமுக பெற்றுள்ளதால், கட்டக்குடி கூட்டுறவு சங்கமும் அதிமுக வசம் வந்துள்ளது.
வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்களுக்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





