தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

பள்ளிகளுக்கிடையேயான தடகளப் போட்டிகள்

திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளிக்கல்வி துறை சார்பில் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை பள்ளிகளுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. 

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளிக்கல்வி துறை சார்பில் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை பள்ளிகளுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. 
புதன்கிழமை தொடங்கிய விளையாட்டு போட்டியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மாரிமுத்து தொடங்கி வைத்தார்.  இரண்டு நாள்கள் நடைபெற்ற போட்டியில் 14, 17, 19 வயது பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்கு 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, 1500 மீ, 3000 மீ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், திருவாரூர் மாவட்டத்தில் 240 பள்ளிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 2-ஆம் நாளான வியாழக்கிழமை போட்டியில் வென்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.