தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சட்டம் படித்த மாற்றுத் திறனாளிகள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் மாவட்டத்தில் சட்டப்படிப்பு படித்த மாற்றுத் திறனாளிகள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ். 

Published On :

திருவாரூர் மாவட்டத்தில் சட்டப்படிப்பு படித்த மாற்றுத் திறனாளிகள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2018-2019-ஆம் நிதியாண்டுக்கு சட்டப் படிப்பு படித்த மாற்றுத் திறனாளி பட்டதாரிகள் தங்களை வழக்குரைஞர்களாக பதிவு செய்து கொள்வதற்குரிய கட்டணம் செலுத்துவதற்கும், தேவையான சட்டப் புத்தகங்கள் வாங்கிக் கொள்ளவும் வழங்கப்பட்டு வரும் நிதியுதவி ரூ. 3 ஆயிரத்திலிருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. 
எனவே, 2018-2019ஆம் நிதியாண்டுக்கான சட்டப் படிப்பு படித்த (முற்றிலும் கண் பார்வையற்றவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள்) தகுதியான மாற்றுத் திறனாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்படவுள்ளது. தகுதியான மாற்றுத் திறனாளிகள் முழு சுயவிவரம், மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை, வழக்குரைஞராக பதிவு செய்த எண் இவற்றின் நகலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துக்கு செப்.25-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.