
தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு
திருவாரூரில் பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளில் வெற்றி பெற்ற ஸ்ரீ ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருவாரூரில் பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளில் வெற்றி பெற்ற ஸ்ரீ ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருவாரூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கிடையேயான குழு மற்றும் தடகளப் போட்டிகளில், ஸ்ரீ ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில், குழு போட்டிகளில் 31 அணிகள் பங்கேற்றன. இதில், 24 அணிகள் முதலிடமும், 5 அணிகள் இரண்டாமிடமும் பெற்றன.
குழு போட்டிகளில் 210 புள்ளிகளும், தடகளப் போட்டிகளில் 149 புள்ளிகளும் பெற்று, குழு மற்றும் தடகளப் போட்டிகளில் 359 புள்ளிகளுடன், திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பான இடத்தை இப்பள்ளி பிடித்துள்ளது. வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளித் தாளாளர் மு. வடுகநாதன், தலைமை ஆசிரியை பெ. வசந்தா உள்ளிட்டோர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



