மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

நீடாமங்கலத்தில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்: காவலர்களை நியமிக்கக் கோரிக்கை

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் ரயில்வே கேட் மூடப்பட்டதால் புதன்கிழமை அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Published On :

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் ரயில்வே கேட் மூடப்பட்டதால் புதன்கிழமை அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பேருந்து பயணிகள், பாதசாரிகள் உள்ளிட்ட பலரும் கடும் அவதிக்குள்ளாகினர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்த காவலர்களை நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையிலிருந்து அதிகாலை 4.45 மணிக்கு நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் மன்னை விரைவு ரயில், புதன்கிழமை 2.45 மணிநேரம் தாமதமாக, அதாவது காலை 7.30 மணிக்குத்தான் சென்றது. 
பின்னர், மயிலாடுதுறை பயணிகள் ரயில் மன்னார்குடியிலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு, நீடாமங்கலம் வழியாக திருவாரூர் சென்றடைந்தது.
இதனிடையே, சரக்கு ரயில் பெட்டிகள் வருகை காரணமாக நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு பயணிகள் ரயில்கள், விரைவு ரயில்கள் புதன்கிழமை காலை அரை மணிநேரம் தாமதமாக வந்தன. இதன் காரணமாக அடிக்கடி ரயில்வே கேட் மூடப்பட்டதால், ஏராளமான வாகனங்கள் சாலையின் இருபுறமும் எதிர் எதிரே அணிவகுத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், முகூர்த்த நாள் என்பதால் இருசக்கர வாகனங்களும் ஏராளமாக சாலைகளில் நின்றன. போக்குவரத்து நெருக்கடியால் பேருந்து பயணிகள், பாதசாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகினர்.
போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும்: நீடாமங்கலத்தில் இதுபோன்று அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போக்குவரத்து காவலர்களை நியமித்திட திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் நடவடிக்கை வேண்டும் என பொதுமக்களும், வர்த்தகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ரயில்வே கேட் மூடப்படும்போது, விதிகளை மீறி இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ரயில்வே கேட்டை கடந்து செல்லும் அபாயமும் நிலவுகிறது. இதை ரயில்வே போலீஸார் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.