கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்: தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தல்

தூத்துக்குடி துறைமுக சரக்குப் போக்குவரத்தைக் கூடுதலாகப் பெற ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.

Published On :

தூத்துக்குடி துறைமுக சரக்குப் போக்குவரத்தைக் கூடுதலாகப் பெற ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அதன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் வெளியிட்ட அறிக்கை:
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ஆண்டுக்கு 365 லட்சம் டன் சரக்கு கையாள்வதில் 6 லட்சம் டன், சரக்கு ரயிலில் கொண்டு செல்லப்படுகிறது. இத்துறைமுகத்தில் சராசரியாக நாளொன்றுக்கு ஒரு சரக்கு ரயில் வீதம் அவ்வப்போது சுண்ணாம்புக்கல் மற்றும் நிலக்கரி எடுத்துச் செல்லப்படுகின்றன. 4,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின்நிலையங்கள் இந்த பகுதிகளில் அமைக்கப்பட்டு  வருகின்றன. மேலும், தூத்துக்குடி துறைமுக முதல்கட்ட விரிவாக்கப் பணிகள் ரூ.13,775 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இதனால், அடுத்த 10 ஆண்டுகளில் 350 லட்சம் டன் நிலக்கரியைக் கூடுதலாக இந்தத் துறைமுகம் கையாள இருக்கிறது. 
இதையொட்டி, பலவித உள்கட்டமைப்புகள் ரயில்வேக்கு தேவைப்படுகின்றன. ஆகையால், தூத்துக்குடி துறைமுக சரக்கு போக்குவரத்தைக் கூடுதலாகப் பெற ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.