ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

அரசுப் பள்ளிக்கு பொதுமக்கள் சார்பில் சீர்வரிசை

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கச்சனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :26 பிப்ரவரி 2019, 1:30 am IST

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கச்சனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் இன்பவேணி தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சூசைரெத்தினம் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் சாந்தி அனைவரையும் வரவேற்றார். பள்ளிக்குத் தேவையான மேஜை, நாற்காலி, எழுதுபொருள்கள், குடிநீர் கேன் உள்ளிட்ட ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை  பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கடை வீதியில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து, பள்ளிக்கு வழங்கினர். பின்னர், பள்ளியின் பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கலியபெருமாள், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் செல்வி மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவியர், பெற்றோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.