ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

மத்திய அரசின் சாதனைகளை விளக்கி வாகனப் பேரணி: பாஜக முடிவு

மத்திய அரசின் சாதனைகளை விளக்கி, பாஜக சார்பில் மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட

Updated On :26 பிப்ரவரி 2019, 1:25 am IST

மத்திய அரசின் சாதனைகளை விளக்கி, பாஜக சார்பில் மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனப் பேரணி நடத்த பாஜக சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
மன்னார்குடியில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின், ஐந்தாண்டு கால ஆட்சியில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில், மார்ச் 2-ஆம் தேதி, மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நீடாமங்கலத்தில் தொடங்கி தொகுதி முழுதுவம் பிரசாரம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது. 
கட்சியின் மன்னார்குடி தொகுதி பொறுப்பாளர் வி.கே. செல்வம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் தேசியப் பொதுக்குழு உறுப்பினர் ஞானம். ரவிச்சந்திரன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் சிவ.காமராஜ், கோட்ட இணைப் பொறுப்பாளர் சி.எஸ். கண்ணன, மாவட்ட துணைத் தலைவர் மோகன், வாகனப் பேரணி ஒருங்கிணைப்பாளர் அறிவுராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.