நன்னிலம் வட்டம், இஞ்சிக்குடி அரசுப் பள்ளியில் பேரிடர்கால முன்னெச்சரிக்கை பயிற்சி மாணவர்களுக்கு அண்மையில் அளிக்கப்பட்டது.
பள்ளிப் பரிமாற்றத் திட்டத்தின் நிறைவு நாளையொட்டி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பேரளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தின் தலைமை அலுவலர் சத்தியமூர்த்தி கலந்துகொண்டு நிலநடுக்கம், புயல், வெள்ளம், தீ போன்ற போன்ற பேரிடர் காலங்களில் செயல்பட வேண்டிய விதம் குறித்து மாணவர்களுக்கு பயிற்சியளித்தார்.
நிகழ்ச்சிக்கு, வட்டாரக் கல்வி அலுவலர்கள் சரஸ்வதி, மோகன்ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் காசிராஜன் வரவேற்றார். ஆசிரியை உமா தேவி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









