வருகிற மக்களவைத் தேர்தலில் மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசார வியூகம் குறித்து திருவாரூரில் அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் தெரிவித்தது:
மக்களவைத் தேர்தலில் மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்யப்படும். இத்தேர்தலில் தமிழகத்தில் எல்லா கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதற்கு வாய்ப்பில்லாத சில கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை மக்கள் பிரச்னைகளுக்காக கூட்டியக்கமாக செயல்பட்ட திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலில் வகுப்புவாத, மதவாத, ஊழல் நிறைந்த மற்றும் சாதியவாத கட்சிகளான பாஜக, அதிமுக, பாமக கட்சிகளை தோற்கடிப்பதே பிரதான இலக்கு.
மேலும், இந்தத் தேர்தலில் விவசாயத் தொழிலாளர்களுக்காக நடத்தப்படும் 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாள் வேலைத் திட்டமாக உயர்த்தி, விவசாயத் தொழிலாளர்களுக்கு வாழ்நாள் முழுவதும் வேலை வழங்க வழிவகை செய்வது; மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அமல்படுத்தி டெல்டாவை பாலைவனமாக்கும் முயற்சியைக் கைவிடச் செய்வது உள்ளிட்டவைகள் குறித்து பிரசாரம் செய்யப்படும்.
அத்துடன் விவசாயக் கடன் தள்ளுபடி, மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி பிரச்னைகளிலும் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளிடம் வலியுறுத்துவோம்.
நாடாளுமன்றத் தேர்தலில் கேட்டுள்ள உரிய தொகுதி, உரிய இடங்கள் கண்டிப்பாக கிடைக்கும். மேலும் இந்த நாடாளுமன்றத் தேர்தலோடு, 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையும் நடத்த வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

பெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடை!
ஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

நடிகர் ஜெயராம் காலில் விழுந்த தோனியின் மனைவி! ஏன்?
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


