தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை

மன்னார்குடியை அடுத்துள்ள தென்பரை ஊராட்சியில் நான்கு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஊக்கத் தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது. 

Updated On :23 ஜனவரி 2019, 5:48 am IST

மன்னார்குடியை அடுத்துள்ள தென்பரை ஊராட்சியில் நான்கு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஊக்கத் தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது. 
தென்பரை அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள பாரதியார் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். ஐ.நா. சபையில் இந்தியா சார்பில் கணக்குத் தணிக்கைப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரி தென்பரை டி.ஆர்.கிருஷ்ணமாச்சாரியார் குடும்பத்தினர் வழங்கியுள்ள ரூ.8 லட்சம் வைப்புத் தொகையிலிருந்து கிடைத்த வட்டித் தொகை ரூ.60 ஆயிரத்தைக் கொண்டு இந்த ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
 தென்பரை ஊராட்சிக்குள்பட்ட தென்பரை அரசு  உயர்நிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி, தெற்குத் தென்பரை தொடக்கப் பள்ளி, மேலக்காடு தொடக்கப் பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளில் பள்ளித் தேர்வு மற்றும் விளையாட்டு, கலை, அறிவியல் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு இந்த ஊக்கத் தொகையை டி.ஆர். கிருஷ்ணமாச்சாரியார் வழங்கினார்.
 அத்துடன், தென்பரை ரோட்டரி சமுதாயக் குழுமம் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர் பேரவையினர் இணைந்து, 10-ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவி ஜெ. ரேவதிக்கு ரூ.2 ஆயிரம், அ. சினேகாவுக்கு ரூ.1,500, தா. ஹரிணிக்கு ரூ. 1,000 ரொக்கப் பரிசு வழங்கினர். மன்னை மிட்டவுன் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ந. சாந்தகுமார், ரோட்ராக்ட் ஒருங்கிணைப்பாளர் ஜெ. வெங்கடேஷ், ரோட்டரி சமுதாய குழுமத் தலைவர் நா. சுப்ரமணியன் ஆகியோர் இந்த ரொக்கப் பரிசை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக  அமெரிக்காவில் பணிபுரியும் டி.ஆர்.கே. ரமேஷ், டி.ஆர்.கே. பாஸ்கர், சீனாவில் பணிபுரியும் பாலமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர். 
ஊராட்சி முன்னாள் தலைவர் தேவகி ஆவணி, தொடக்கப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்  கோவிந்தராஜ், நூற்றாண்டு விழாக் குழு பொருளாளர் வரதராஜன், கிராம கமிட்டி தலைவர்  தங்கராசு, தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் ரவி, பேபி நாகம்மாள், சமுதாயக் குழும செயலர் ராக.பாஸ்கர், பொருளாளர் பி.மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.