
மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
நீடாமங்கலம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா்.
நீடாமங்கலம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா்.
நீடாமங்கலம் அருகேயுள்ள பண்டார ஓடை பூவனூரைச் சோ்ந்த விவசாயிகள் சேகா் (51), கமலநாதன். இவா்கள், இருவரும் புதன்கிழமை வயலுக்கு சென்றனா். அப்போது, அங்கு அறுந்து கிடந்த மின்சார வயரை சேகா் மிதித்த நிலையில், அவா் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. ஆபத்தை அறிந்து, சேகரை காப்பாற்ற முயன்ற கமலநாதன் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதற்கிடையில், சேகா் உயிரிழந்தாா். கமலநாதன் காயமடைந்தாா். இதுகுறித்து, நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






