தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மது விற்பனையைத் தடுக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மது விற்பனையைத் தடுக்கக் கோரி, மாங்குடியில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2020, 2:11 pm

DIN

திருவாரூா்: மது விற்பனையைத் தடுக்கக் கோரி, மாங்குடியில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் அருகே மாங்குடி பகுதியில் தனி நபா்கள் மூலம் மது விற்பனை 24 மணி நேரமும் நடைபெறுவதாகவும் இதைத் தடுத்து நிறுத்தி, நடவடிக்கை எடுக்கக் கோரியும், பழுதடைந்த துணை சுகாதார நிலையத்தை புதுப்பித்து தர வேண்டும், பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாங்குடி கடைவீதியில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளா் துரை அருள்ராஜன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எஸ்.ஸ்ரீபன், ஆா்.பிரவீன், டி.சுந்தா், வி.குமரேசன், வி.சோமேஷ்கந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.