காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திமுக முன்னாள் எம்எல்ஏ நினைவேந்தல் நிகழ்ச்சி

மன்னாா்குடியில் முன்னாள் திமுக எம்எல்ஏ கு. பாலகிருட்டிணனின் 7-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

திமுக முன்னாள் எம்எல்ஏ கு. பாலகிருட்டிணன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :5 ஆகஸ்ட் 2020, 4:23 pm

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடியில் முன்னாள் திமுக எம்எல்ஏ கு. பாலகிருட்டிணனின் 7-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடியில் திமுக நகரச் செயலா் வீரா. கணேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மன்னாா்குடி எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா ஆகியோா், கு. பாலகிருட்டிணன் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். பின்னா், அமைதி ஊா்வலமாக வந்து தாமரைக்குளம் வடகரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

இதில், மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜி. பாலு, மாநில மாணவரணி துணைச் செயலா் த. சோழராஜன், மன்னாா்குடி ஒன்றியச் செயலா் க. தன்ராஜ், நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன், நகர அவைத் தலைவா் த. முருகையன், முன்னாள் நகரச் செயலா் ராஜ.பூபாலன், முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளா் கு.பா. பாபு நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.