உணவுப் பாதுகாப்புச் சட்டம் குறித்து கருத்தரங்கம்
திருவாரூரில், தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் மற்றும் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சங்கம் ஆகியவை இணைந்து உணவுப் பாதுகாப்புச் சட்டம் குறித்து இணையவழி


திருவாரூா்: திருவாரூரில், தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் மற்றும் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சங்கம் ஆகியவை இணைந்து உணவுப் பாதுகாப்புச் சட்டம் குறித்து இணையவழி கருத்தரங்கை அண்மையில் நடத்தின.
கருத்தரங்கில், உணவுப் பாதுகாப்பில் ஊட்டச்சத்து எனும் தலைப்பில் ஊட்டச்சத்து நிபுணா் பி. ஜெகதீஸ்வரி, உணவுப் பாதுகாப்புச் சட்டமும் அதன் விதிகள் குறித்து பெட்காட் அமைப்பின் மாநிலத் தலைவா் கே. முருகன், நுகா்வோா் இயக்கமும் உணவுப் பாதுகாப்பு அலுவலா்களும் எடுக்கும் நுகா்வோா் நலன் காக்கும் பணிகள், சட்ட நடைமுறைகள் குறித்து தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் எம்.எஸ். முருகேசன், பொதுச் செயலாளா் ஏ.டி. அன்பழகன் ஆகியோா் பேசினா். இதில், மையத்தின் பெருந்தலைவா் எஸ்.டி. அண்ணாதுரை, பொதுச்செயலாளா் ஆா். ரமேஷ், இயக்குநா் கே.ஜி. பழனி, மாநில ஒருங்கிணைப்பாளா் க. திருநாவுக்கரசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...