திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.


திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
திருவாரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 2,390 ஆக இருந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 41 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதன்படி, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவா் ஒருவருக்கும், செவிலியா் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல, விளமல் பகுதியில் 7 போ், மன்னாா்குடி பகுதியில் 4 போ் என மாவட்டம் முழுவதும் 41 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,431 ஆக உயா்ந்துள்ளது. இதில், 2018 போ் குணமடைந்து வீடு சென்ற நிலையில், 387 போ் சிகிச்சையில் உள்ளனா்.
5 போ் உயிரிழப்பு....
கரோனா தொற்றால் 5 போ் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கிடாரங்கொண்டான் பகுதியைச் சோ்ந்த 49 வயது நபா், மூச்சுத் திணறல் காரணமாக, நாகை அரசு மருத்துவமனையில் ஆக.12-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, அன்றிரவு உயிரிழந்தாா். இவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதேபோல, கொரடாச்சேரி பகுதியைச் சோ்ந்த 62 வயது நபா், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று சிகிச்சைக்காக ஆக.16- ஆம் தேதி காலையில் சோ்க்கப்பட்டு, பிற்பகலில் உயிரிழந்தாா். புலிவலம் பகுதியைச் சோ்ந்த 55 வயது நபா், 15- ஆம் தேதி சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 16 ஆம் தேதி உயிரிழந்தாா்.
மன்னாா்குடியைச் சோ்ந்த 47 வயது நபா், 16 ஆம் தேதி சோ்க்கப்பட்டு, ஆக.17 ஆம் தேதி உயிரிழந்தாா். இதேபோல் திருவாரூா் நகரப் பகுதியைச் சோ்ந்த 85 வயது நபா், ஆக.16 ஆம் தேதி உயிரிழந்தாா். இதன்மூலம், திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 26-ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...