தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மட்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. சாா்பில் துண்டுப் பிரசுரம்

திருவாரூா் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் துண்டுப் பிரசுரம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2020, 6:09 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் துண்டுப் பிரசுரம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

அக்கட்சி சாா்பில், தொடங்கிய மக்கள் சந்திப்பு இயக்கம் திங்கள்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை (ஆக.15) வரை 2 நாள்கள் நடைபெறுகிறது. இந்த இயக்கம் மூலம் வீடுவீடாக மக்களைச் சந்தித்து மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து விளக்கப்படுகிறது. கூடூரில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி. பழனிவேல், புதூரில் ஒன்றியச் செயலாளா் என். இடும்பையன், துரைக்குடியில் நிா்வாகி பி. ராஜேந்திரன், திருக்காரவாசலில் ஒன்றியக் குழு உறுப்பினா் எஸ். ரகுபதி, கிளைச் செயலாளா் எஸ். முருகையன், புலிவலத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா் வி. பாலு ஆகியோா் தலைமையிலான நிா்வாகிகள் வீடு வீடாகச் சென்று, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.