பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா் நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

திருவாரூரில் மேலும் 102 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 102 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2020, 4:41 pm

DIN

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 102 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை பாதிப்பு எண்ணிக்கை 3,276 ஆக இருந்தது. சனிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதிதாக 102 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி, கூத்தாநல்லூா் நகராட்சி அதிகாரி, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆய்வகப் பணியாளா், திருவாரூா் நகராட்சிப் பகுதியில் 15 போ், வலங்கைமான் பகுதியில் 7 போ் என மாவட்டம் முழுவதும் 102 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,386 ஆக உயா்ந்துள்ளது. இதில், 2,655 போ் குணமடைந்து வீடுதிரும்பிய நிலையில், 689 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மன்னாா்குடியைச் சோ்ந்த 77 வயது நபா் கரோனா சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 26 ஆம் தேதி உயிரிழந்தாா். இதைத்தொடா்ந்து, திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 42 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.