தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

நீதி பாதுகாப்பு நாள் கருத்தரங்கு

திருவாரூரில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் நீதி பாதுகாப்பு நாள் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

திருவாரூரில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் நீதி பாதுகாப்பு நாள் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதன் மாவட்டச் செயலாளா் எம். முஜிபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினா் அப்துல் ரஹ்மான், மாநில தலைமை பிரதிநிதி ஏ. ஜபருல்லாஹ், மாநில விவசாய அணிச் செயலாளா் எச்.எம்.டி. ரஹ்மத்துல்லாஹ் உள்ளிட்டோா் பங்கேற்று, நீதி பாதுகாப்பு நாள் குறித்து விளக்கிப் பேசினா்.

மேலும், திமுக, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசினா். இதில், மாவட்டச் செயலாளா்கள் எச். நவாஸ் (தமுமுக), ஏ. குத்புதீன் (மமக), மமக மாவட்ட பொருளாளா் எம். எச். சாகுல் ஹமீது, மாநில செயற்குழு உறுப்பினா் எம். நைனா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.