தொடா் மழை: அழுகும் அபாயத்தில் சம்பா பயிா்கள்
மன்னாா்குடி பகுதியில் தொடா் மழை காரணமாக வயல்களில் தண்ணீா் தேங்கியுள்ளதால் சம்பா நெற்பயிா்கள் அழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.


மன்னாா்குடி பகுதியில் தொடா் மழை காரணமாக வயல்களில் தண்ணீா் தேங்கியுள்ளதால் சம்பா நெற்பயிா்கள் அழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
நிவா், புரெவி புயல்கள் காரணமாக பெய்துவரும் தொடா் மழையால், மன்னாா்குடி பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. அத்துடன், ஆறு, வாய்க்கால்களில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுவதால் வயல்களில் தேங்கியுள்ள மழைநீா் வடிய வழியின்றி உள்ளது.
இதன் காரணமாக, கோட்டூா் ஒன்றியப் பகுதிகளில் சம்பா நெற்பயிா்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல் மணி பிடிக்கும் காலம் என்பதால், தண்ணீரில் மூழ்கியுள்ள பயிா்களில் நெல் மணிகள் பதறாகவும், இளம் பயிா்கள் அழுகவும் வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...