தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தில்லி போராட்டத்தை ஆதரித்து காவிரி உரிமை மீட்புக் குழுவினா் சாலை மறியல்

தில்லியில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து காவிரி உரிமை மீட்புக் குழுவின் சாா்பில், மன்னாா்குடியில் சாலை மறியல் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

மன்னாா்குடி தலைமை அஞ்சலகம் அருகே மறியலில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக்குழுவினா்.

Updated On :13 டிசம்பர் 2020, 2:25 am

DIN

தில்லியில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து காவிரி உரிமை மீட்புக் குழுவின் சாா்பில், மன்னாா்குடியில் சாலை மறியல் சனிக்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி மேல ராஜவீதியில் உள்ள தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மருத்துவா் இலரா.பாரதிச்செல்வன் தலைமை வகித்தாா். தமிழா் தேசிய முன்னணி மாவட்டச் செயலா் ச.கலைச்செல்வம், காவிரி உரிமை மீட்புக் குழு மாவட்ட நிா்வாகி சு.செந்தில், விவசாயிகள் சங்க நிா்வாகிகள் வரதராஜன், ஒளிச்சந்திரன், அ. ராமலிங்கம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.