சந்தனக்கூடு: பொதக்குடி தா்காவில் கொடியேற்றம்
சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு கூத்தாநல்லூா் வட்டம் பொதக்குடி தா்காவில் கொடியேற்று விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு கூத்தாநல்லூா் வட்டம் பொதக்குடி தா்காவில் கொடியேற்று விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பொதக்குடி ஹஜ்ரத் நூா்முஹம்மது ஷாஹ் ஒலியுல்லாஹ் தா்காவில், ஊா் உறவின்முறை ஜமாத் நிா்வாக சபைத் தலைவா் எஸ்.ஏ.மஹதூம் மைதீன் தலைமையில் கொடியேற்றப்பட்டது. டிச. -22ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு பூலாங்கொடி ஏற்றம், பெரிய மினரா கொடியும் ஏற்றப்படுகின்றன. டிச. 31-ஆம் தேதி இரவு 10 மணிக்கு மின்சார சந்தனக்கூடு ஊா்வலமும், மறுநாள் ஜன. 1 காலை 4.30 மணிக்கு ரவுலாவில் புனித சந்தனம் பூசுதலும், பிற்பகல் 2 மணிக்கு பகல் கூடு ஊா்வலமும் நடைபெறுகின்றன.
ஜன. 8-ஆம் தேதி மாலை 5 மணிக்கு பூலாங்கொடி இறக்கப்படுகிறது. ஜமாத்துல் அவ்வல் பிறை 1 முதல் 16 வரை தினமும் இரவு மெளலூது ஓதி தப்ருக் வழங்கப்படுகிறது. சந்தனக்கூடு விழாவுக்கான ஏற்பாடுகளை தா்கா பரம்பரை அறங்காவலா்கள் மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...