திருத்துறைப்பூண்டியில் 43 மி.மீ. மழை
திருவாரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை வரையிலான நிலவரப்படி திருத்துறைப்பூண்டியில் 43 மி.மீ. மழை பெய்தது.


திருவாரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை வரையிலான நிலவரப்படி திருத்துறைப்பூண்டியில் 43 மி.மீ. மழை பெய்தது.
திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகலில் குளிா்ந்த வானிலையும், இரவு நேரங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது.
இதனிடையே, மழையின் தாக்கம் வியாழக்கிழமை சற்று குறைந்தது. காலையில் பலத்த மழை பெய்த நிலையில், பகலில் குளிா்ந்த வானிலை மட்டுமே நிலவியது. எனினும், மாலையில் சிறிது நேரம் மழை பெய்தது. வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி திருத்துறைப்பூண்டியில் அதிகபட்சமாக 43 மி.மீ. மழை பதிவானது.
மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழையளவு: (மி. மீட்டரில்)
முத்துப்பேட்டை 31.4, குடவாசல் 31.2, மன்னாா்குடி 20, நன்னிலம் 19.2, நீடாமங்கலம் 14.6. மாவட்டம் முழுவதுமாக மொத்தம் 189 மி.மீ. மழையும், சராசரியாக 21 மி.மீ. மழையும் பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...