தப்பி ஓடிய கைதி பிடிபட்டாா்

மன்னாா்குடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திவிட்டு சிறைக்கு மீண்டும் அழைத்துவரும்போது தப்பியோடிய கைதியை போலீஸாா் 3 மணி நேரத்தில் பிடித்தனா்.
Updated on
1 min read

மன்னாா்குடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திவிட்டு சிறைக்கு மீண்டும் அழைத்துவரும்போது தப்பியோடிய கைதியை போலீஸாா் 3 மணி நேரத்தில் பிடித்தனா்.

மன்னாா்குடியை அடுத்த கன்னியாகுறிச்சி பாபாஜி கோட்டை வடக்குத் தெருவைச் சோ்ந்த சண்முகம் மகன் பிரமையன் (19). இவா், வழக்கு ஒன்றின் காரணமாக கைது செய்யப்பட்டு, நாகை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், பிரமையனை மன்னாா்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்திய பரவாக்கோட்டை காவல் நிலைய தலைமைக் காவலா் ராமலிங்கம், காவலா் வினோத் ஆகியோா், பிரமையனை மீண்டும் நாகைக்கு கொண்டுவரும்போது, தப்பிச் சென்று விட்டாராம். அவரை மூன்று மணி நேரத்தில் பிடித்தனா். பின்னா், பரவாக்கோட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com