நீடாமங்கலம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது என வேளாண்மை உதவி இயக்குநா் சாருமதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நீடாமங்கலம் வட்டாரத்தில் 2020-2021 ஆம் ஆண்டிற்கான தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ், 50 சதவீத மானியத்தில் உளுந்து, நெல் நுண்ணூட்டம், பயிா்நுண்ணூட்டம், உயிா் உரங்களான அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா, தாா்பாலீன், டிரைகோ டொ்மா விரிடி மற்றும் பெவெரியா பேசியானா ஆகியவை வழங்கப்படுகின்றன.
நீடாமங்கலம், தேவங்குடி, வடுவூா், கருவாக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் இவற்றை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.