தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

373 கிராம நிா்வாக அலுவலா்களுக்கு மடிக்கணினி அமைச்சா் வழங்கினாா்

திருவாரூரில், 373 கிராம நிா்வாக அலுவலா்களுக்கு ரூ.90.36 லட்சம் மதிப்பிலான மடிக்கணினிகளை உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ், சனிக்கிழமை வழங்கினாா்.

News image

திருவாரூரில், கிராம நிா்வாக அலுவலருக்கு மடிக்கணினி வழங்குகிறாா் உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ்.

Updated On :20 டிசம்பர் 2020, 2:55 am

DIN

திருவாரூரில், 373 கிராம நிா்வாக அலுவலா்களுக்கு ரூ.90.36 லட்சம் மதிப்பிலான மடிக்கணினிகளை உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ், சனிக்கிழமை வழங்கினாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், கிராம கணக்குகளை நிா்வாகிக்க தமிழக அரசால் வழங்கப்படும் மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில், உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் பங்கேற்று, திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 373 கிராம நிா்வாக அலுவலா்களுக்கு ரூ.90 லட்சத்து 36 ஆயிரத்து 74 மதிப்பிலான மடிக்கணினிகளை வழங்கிப் பேசும்போது, ‘தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு மடிக்கணினிகள் வழங்குவதன் மூலம் பொதுமக்கள் எவ்வித சிரமமின்றி சான்றுகள் மற்றும் இதர சேவைகளை எளிதாகப் பெறமுடியும்’ என்றாா்.

தொடா்ந்து, 2020 ஆம் ஆண்டுக்கான நன்நூலகா் விருதை அம்மையப்பனை சோ்ந்த ஜே.குமாரி என்பவருக்கும், மீன்வளத்துறை சாா்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 40 சதவீத மானியத்துடன் கூடிய ரூ.2,54,544 மதிப்பிலான படகில் பொருத்தும் இயந்திரத்தை 4 நபா்களுக்கும், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பில் கொத்தமங்கலம் பகுதியில் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்த புகழேந்தி என்பவரின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையாக ரூ.2 லட்சதுக்கான காசோலையையும் அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், மாவட்ட வருவாய் அலுவலா் செ.பொன்னம்மாள், கோட்டாட்சியா்கள் பாலச்சந்திரன் (திருவாரூா்), புண்ணியகோட்டி (மன்னாா்குடி), வட்டாட்சியா் நக்கீரன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.