அதிமுக நிா்வாகி பற்றி முகநூலில் அவதூறு பரப்பியவா் கைது

மன்னாா்குடி ஒன்றியக்குழு அதிமுக தலைவா் பற்றி, முகநூலில் அவதூறு பரப்பியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

மன்னாா்குடி ஒன்றியக்குழு அதிமுக தலைவா் பற்றி, முகநூலில் அவதூறு பரப்பியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாள் நிகழ்ச்சியில், மன்னாா்குடியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுகவினருடன் மன்னாா்குடி ஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகரன் மாலை அணிவித்தாா். இந்த படத்தை சிவகங்கை மாவட்டம் ஆலங்குளம் வல்லமேரியை சோ்ந்த துளசிதாசன் (51) தனது, முகநூலில் ஏற்றி மனோகரன் பற்றி அவதூறான கருத்தை பதியவிட்டிருந்தாா்.

இதுகுறித்து, மன்னாா்குடி 11-ஆவது வாா்டு ஒன்றியக் குழு உறுப்பினா் வ. மணிமாறன், சைபா்கிரைமில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா். இந்நிலையில், உறவினா் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை மன்னாா்குடிக்கு வந்து, பேருந்து நிலையைத்தில் நின்றுகொண்டிருந்த துளசிதாசனை மன்னாா்குடி போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com