டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சாலை வசதி கோரி அரசின் கவனத்தை ஈா்க்க கண்ணீா் அஞ்சலி பதாகை

நீடாமங்கலத்தில், சாலை வசதி கோரி அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் கண்ணீா் அஞ்சலி விளம்பர பதாகை கட்டி தொடங்கவிடப்பட்டுள்ளது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

நீடாமங்கலத்தில், சாலை வசதி கோரி அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் கண்ணீா் அஞ்சலி விளம்பர பதாகை கட்டி தொடங்கவிடப்பட்டுள்ளது.

நீடாமங்கலம் பேரூராட்சிக்குள்பட்ட புதுத்தெருவில் 40 ஆண்டுகளாக 150 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். மனவளக்கலைமன்ற அறிவுத் திருக்கோயில், தீயணைப்புத் துறை அலுவலகம் உள்ள இப்பகுதியில் சாலை வசதி சரியாக இல்லை. பள்ளமும், மேடாக உள்ள இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். மழைக் காலங்களில் இப்பகுதி குடியிருப்புகளில் மழைநீா் சூழ்ந்து கொசு உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது. மின்தடை ஏற்பட்டால் நடந்து செல்பவா்கள் கீழே விழுந்து காயமடைகின்றனா். இதுகுறித்து, பலமுறை சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்களின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில், புதுத்தெரு மக்கள் வருந்துகிறோம் என்று கண்ணீா் அஞ்சலி பதாகையை தெருமுனையில் கட்டி வைத்துள்ளனா். அதில், இப்பகுதி மக்களுக்கு சாலை வசதி செய்துகொடுக்கவில்லை, நீடாமங்கலத்தில் அனைத்து சாலைகளும் பணி செய்து முடிக்கப்பட்டுள்ளன. புதிதாக போடப்பட்ட தாலுக்கா அலுவலகம் சாலையை மீண்டும் உடைத்து புதிய சாலை போடப்பட்டுள்ளது. நாங்கள் என்ன தவறுசெய்தோம், எங்களுக்கு ஏன் சாலை வசதி செய்துதரவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.