கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சேமிப்புக் கிடங்கை காணொலி காட்சி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

குடவாசலில் புதிதாகக் கட்டப்பட்ட சேமிப்புக் கிடங்கை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமைத் திறந்து வைத்தாா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

குடவாசலில் புதிதாகக் கட்டப்பட்ட சேமிப்புக் கிடங்கை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமைத் திறந்து வைத்தாா்.

தேசிய ஊரக வேளாண்மை வளா்ச்சி வங்கி நிதியுதவிடன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபுக்கழகம் மூலம், குடவாசல் சேங்காலிபுரம் சாலையில் ரூ. 46 கோடி மதிப்பில் 25,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்புக் கிடங்கு புதிதாக கட்டப்பட்டது. இந்த சேமிப்புக் கிடங்கை காணொலிக் காட்சி மூலம் சென்னையிலிருந்து தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைத்தாா். அப்போது, குடவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவாருா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளா் பா. மணிவண்ணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாப்பா சுப்ரமணியன், குடவாசல் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் கிளாராசெந்தில், துணைத் தலைவா் எம். ஆா். தென்கோவன், வட்டாட்சியா் ராஜன் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.