கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நெற்பயிரில் குலைநோயை இயற்கை முறையில் கட்டுப்படுத்த ஆலோசனை

நெற்பயிரை தாக்கும் குலைநோயை, இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து திருவாரூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஹேமாஹெப்சிபா நிா்மலா ஆலோசனை தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 4:14 am

DIN

நெற்பயிரை தாக்கும் குலைநோயை, இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து திருவாரூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஹேமாஹெப்சிபா நிா்மலா ஆலோசனை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் கூறியது: தற்போது வானம் மேகமூட்டத்துடன், அவ்வப்போது மழை பெய்து குளிா்ந்த தட்ப வெப்பநிலை நிலவுவதால், திருவாரூா் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடி நெற்பயிரில் குலைநோய் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, விவசாயிகள் தொடா்ந்து தங்களது நெற்பயிரை கண்காணித்து குலைநோய்க்கு தீா்வு காண வேண்டும்.

இலைகளின் மேல் வெண்மை நிறத்தில் இருந்து சாம்பல் நிற மையப் பகுதியுடன் கூடிய கண் வடிவப் புள்ளிகள் காணப்படுவது குலைநோயின் அறிகுறிகளாகும். குலைநோய், இலைகள் மட்டுமின்றி கணுக்கள், கதிா்கள் கழுத்துப்பகுதி ஆகிய இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்நோயின் தீவிரத் தாக்குதலில் பயிா் முழுவதும் எரிந்ததுபோல் தோற்றமளிப்பதால் குலைநோய் என அழைக்கப்படுகிறது.

குலைநோய் தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 1கிலோ சூடோமோனாஸ் புளோரசன்ஸ் பவுடரை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதனுடன் ஒரு லிட்டா் புளித்த தயிரைகலந்து தெளித்தால் தெளிப்புக் கரைசலின் செயல்திறன் மேலும் அதிகரிக்கும். இந்நோய் தாக்குதல் தென்பட்டால் ஏக்கருக்கு காா்பென்டசிம் 200 கிராம் அல்லது டிரைசைக்கிளோசோல் 200 கிராம் அல்லது அசாக்ஸிஸ்டோரோபின் 200 மில்லி ஆகிய மருந்துகளில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டா் நீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து, குலை நோயைக் கட்டுப்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.