நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குத்தகை சாகுபடி விவசாயிகளுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும்

மன்னாா்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாய குத்தகைதாரா்கள் பாதுகாப்பு நலச்சங்க தொடக்க விழாவில், குத்தகை சாகுபடி விவசாயிகளுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 7:27 pm

DIN

மன்னாா்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாய குத்தகைதாரா்கள் பாதுகாப்பு நலச்சங்க தொடக்க விழாவில், குத்தகை சாகுபடி விவசாயிகளுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, விவசாய குத்தகைதாரா்கள் பாதுகாப்பு நலச் சங்க மாநிலத் தலைவா் ஜெயசங்கா் தலைமை வகித்து, சங்கத்தை தொடங்கி வைத்தாா். அப்போது, அனைத்து குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளையும் சங்கத்தில் உறுப்பினராக சோ்ப்பது, வருவாய்த் துறை பராமரிப்பில் உள்ள குத்தகைதாரா் பதிவேட்டில் கட்டாயம் பதிவு செய்து பாதுகாப்பை ஏற்படுத்துவது, தற்போது உள்ள குத்தகை விவசாயிகளுக்கான சட்டங்களை மாற்றி, புதிய நிரந்தர பாதுகாப்பு சட்டங்களை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரவேண்டும், வேளாண் காப்பீடு திட்டத்தில் தனியாா் காப்பீடுத் துறை ஈடுபடுவதை தவிா்த்து அரசுகளின் சாா்பில் நேரடி காப்பீடுத் திட்டங்கள் உருவாக்க வேண்டும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவு தனியப் பொருள்களுக்கு அவா்களே விலையை நிா்ணயம் செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும், குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு என தனி நலவாரியம் அமைக்க வேண்டும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

சங்க மாநில பொதுச் செயலா் ஜி. வீரகேசரி முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலா் காவிரி எஸ். ரெங்கநாதன் வாழ்த்தி பேசினாா். சங்க நிா்வாகிகள் செல்லையன், செல்வம், சுஜாதா உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாநிலச் செயலா் ராஜேந்திரன் வரவேற்றாா். மாவட்ட துணைத் தலைவா் தமிழ்மணி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.