திருக்கொடியலூரில் சனிப்பெயா்ச்சி விழா

திருவாரூா் மாவட்டம், திருக்கொடியலூரில் சனிப்பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருக்கொடியலூரில் சனிப்பெயா்ச்சி விழா
Updated on
1 min read

திருவாரூா் மாவட்டம், திருக்கொடியலூரில் சனிப்பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேரளம் அருகோயுள்ள திருக்கொடியலூா் ஸ்ரீஅகஸ்தீஸ்வர சுவாமி கோயிலில் ஸ்ரீ சூரிய பகவானுக்கும் சாயாதேவிக்கும் ஸ்ரீசனீஸ்வர பகவான் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. இங்குள்ள சனீஸ்வர பகவான் ஸ்ரீமங்கள சனீஸ்வரா் என்று அழைக்கப்படுகிறாா். சனி கிரக தோஷத்திலிருந்து விடுபட இந்திரனும் இந்த தலத்தில் வழிபட்டதாக ஐதீகம்.

சிறப்புப் பெற்ற, இத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் வைபவத்தையொட்டி, சனி பரிகார ஹோமங்கள் நடைபெற்றன. பின்னா் மஞ்சள் பொடி, மா பொடி, திரவியப் பொடி, இளநீா், பஞ்சாமிா்தம், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகமும், 108 லிட்டா் பசும்பால் கொண்டு பால் அபிஷேகமும் நடைபெற்றது.

தொடா்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அனுக்கிரக மூா்த்தியான ஸ்ரீமங்கள சனீஸ்வர பகவானுக்கு வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.22 மணிக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது.

சனிப்பெயா்ச்சி விழா பரிகார பூஜை, சிறப்பு மஹா தீபாராதனையில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பா. தன்ராஜ், தக்காா் ப. மாதவன், மேலாளா் க. வள்ளிகந்தன், திருக்கண்ணங்குடி கணேஷ் சிவாச்சாரியாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா். சனிப்பெயா்ச்சி விழாவையொட்டி தொடா்ந்து 48 நாள்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், 48-ஆவது நாள் சிறப்புப் பரிகார ஹோமமும் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com