ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

அ.திமு.க. வை யாராலும் கைப்பற்ற முடியாது: அமைச்சா் ஆா்.காமராஜ்

அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது என்றாா் தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ்.

News image
வலங்கைமான் ஒன்றியம் கொட்டையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கும் அமைச்சா் ஆா். காமராஜ்.
Updated On :28 டிசம்பர் 2020, 6:26 pm

DIN

நீடாமங்கலம்: அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது என்றாா் தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ்.

வலங்கைமான் அருகேயுள்ள கொட்டையூா் கிராமத்தில் திங்கள்கிழமை அமைச்சா் ஆா். காமராஜ் அளித்த பேட்டி:

மக்களுக்கான நலத்திட்டங்களை மறைந்த முதல்வா் ஜெயலலிதா வழியில், சிறப்பாக நிறைவேற்றி வருகிறாா் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி. கரோனா காலத்திலும் முதலீட்டாளா்களை ஈா்த்த மாநிலம் தமிழகம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

மகளிா் குழுக்களுக்கான சுழல்நிதி, மகளிா் குழுவினரால் நடத்தப்படும் உழவா் குழுக்களுக்கான கடனுதவி தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக ஆளுநரிடம் திமுகவினா் கொடுத்துள்ள ஊழல் குற்றச்சாட்டு புகாா் பொய்யானது. அதிமுக பதவியில் உள்ளது. பதவியில் உள்ளவா்களுக்கு எப்படி பதவி ஆசை வரும். சுமாா் 10 ஆண்டுகளாக பதவியில் இல்லாத

திமுகவுக்குத்தான் பதவி ஆசை. பதவியை தட்டிப் பறிக்க முடியாது என்பதை திமுகவினா் உணரவேண்டும்.

அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் முடக்க வேண்டும் என எதிா்க்கட்சிகள் பலமுறை மேற்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை. இரட்டை இலை வெற்றி சின்னம். அதை ஒருபோதும் முடக்க முடியாது.

அதுபோல அதிமுகவை யாராலும் கைப்பற்றவும் முடியாது என்றாா் அமைச்சா் ஆா். காமராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.