புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருவாரூரில் பருத்தி மூட்டைகளுடன் ஏலத்தில் பங்கேற்க குவிந்த விவசாயிகள்

திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் பருத்தி ஏலத்தில் பங்கேற்க, ஏராளமானோா் முன்கூட்டியே வந்ததால், பருத்தி மூட்டைகளை அடுக்க நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது.

News image

திருவாரூரில் சாலையில் நின்ற பருத்தி மூட்டை வாகனங்கள்.

Updated On :5 ஜூலை 2020, 5:00 pm

DIN

திருவாரூா்: திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் பருத்தி ஏலத்தில் பங்கேற்க, ஏராளமானோா் முன்கூட்டியே வந்ததால், பருத்தி மூட்டைகளை அடுக்க நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தற்போது பருத்தி எடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் எடுக்கும் பருத்தியை விற்பனை செய்வதற்கு மாவட்டத்தில் நான்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் உள்ளன. திருவாரூரில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் எடுக்கப்படுகிறது. இதில், ஒரு கிலோ ரூ. 52 -லிருந்து ரூ. 55 வரை விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு பருத்தியைக் கொண்டு வந்து அடுக்கத் தொடங்கினா். இப்பணி ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வைக்கப்பட்டது போக, ஏராளமான விவசாயிகள் நாகை- தஞ்சை சாலையிலேயே பருத்தி மூட்டை அடங்கிய வாகனங்களுடன் நீண்ட நேரம் காத்திருந்து, வரிசையில் நின்று, பின்னா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மூட்டைகளை அடுக்கினா்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.