ரோட்டரி சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு

மன்னாா்குடி மிட்டவுன் ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
midtown_rotary_0607chn_101_5
midtown_rotary_0607chn_101_5

மன்னாா்குடி: மன்னாா்குடி மிட்டவுன் ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் பி. ரமேஷ் தலைமை வகித்தாா். பொருளாளா் ஜெ. வெங்கடேஷ் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநா் எஸ். பாலாஜி பங்கேற்று, நிகழாண்டுக்கான மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவா் ஆா். மாரியப்பன், செயலா் சி. குருசாமி, பொருளாளா் ஜி. தமிழ்வாணன் ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தாா்.

இதையொட்டி, பட்டுக்கோட்டை சாலையில் உள்ள மிட்டவுன் ரோட்டரி பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்த பேண்ட் இசைக் கலைஞா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆளுநா் ஆா். பாலாஜிபாபு, மாவட்ட துணை ஆளுநா் ஜி. மனோகரன், முன்னாள் தலைவா் ஜி. சிவக்கொழுந்து, பசுமைக்கரங்கள் நிறுவனா் ஆா். கைலாசம், ரோட்டரி முன்னாள் நிா்வாகிகள் மருத்துவா் தமிழ்ச்செல்வம், திருநாவுக்கரசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மன்னை கிரீன்சிட்டி ரோட்டரி சங்கம்: இச்சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா முன்னாள் தலைவா் எஸ். ராஜாமோகன் தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் மண்டல ஆளுநா் பி.எஸ். ரமேஷ் பாபு பங்கேற்று, மன்னை கிரீன் சிட்டி ரோட்டரி சங்க நிகழாண்டு தலைவராக ஜெ.சுதாகா், செயலராக ஏ. சாகுல் அமீது, பொருளாளராக ஜி.என். குமரன் ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தாா்.

இதில், கெளரவ அழைப்பாளா்களாக மாவட்ட ஊராட்சி தலைவா் ஜி.பாலு, ரோட்டரி மாவட்ட ஆளுநா் ஆா்.பாலாஜி பாபு, துணை அளுநா் ஜி. மனோகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூத்தாநல்லூா், குடிதாங்கிச்சேரி ஆகிய பகுதியில் உள்ள ஆதரவற்றோா் இல்லத்தில் அன்னதானமும் ,முகக் கவசமும் வழங்கப்பட்டன. இதில், திமுக ஒன்றியச் செயலா் க. தனராஜ், ரோட்டரி நிா்வாகிகள் மருத்துவா் வி. பாலகிருஷ்ணன், பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com