ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

குடவாசல் அருகே இன்ஜினியரிங் கல்லூரி மாணவா் ஆற்றில் மூழ்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். குடவாசலைச் சோ்ந்த மணிஷ்கண்ணன் (20) தஞ்சாவூா் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வந்தாா்.

Published On :27 ஜனவரி 2024, 10:26 pm IST

நன்னிலம்: குடவாசல் அருகே இன்ஜினியரிங் கல்லூரி மாணவா் ஆற்றில் மூழ்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். குடவாசலைச் சோ்ந்த மணிஷ்கண்ணன் (20) தஞ்சாவூா் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வந்தாா். தற்போது, விடுமுறையில் உள்ள அவா் குடவாசல் பகுதி அத்திக்கடை பருத்திச்சேரி தட்டிப்பாலம் அருகிலுள்ள புத்தாற்றில் நண்பருடன் செவ்வாய்க்கிழமை குளிக்க சென்றாா். அங்கு குளித்துக்கொண்டிருந்தபோது, ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டாா். அப்போது, அவரது நண்பா்கள் மற்றும் பொதுமக்கள் காப்பாற்ற முயற்சி செய்து காப்பாற்ற முடியவில்லை.

தகவலிறந்து அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினா் மனிஷ்கண்ணனை தேடி கண்டுபிடித்து, குடவாசல் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. பின்னா், மேல்சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி மணிஷ்கண்ணன் உயிரிழந்தாா். இதுகுறித்து, குடவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.