வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

டி20 வரலாற்றில் ஸ்டீவ் ஸ்மித் - ஆண்ட்ரீஸ் கௌஸ் நிகழ்த்திய உலக சாதனை!

டி20 கிரிக்கெட் வரலாற்றில் உலக சாதனை நிகழ்த்திய ஸ்டீவ் ஸ்மித் - ஆண்ட்ரீஸ் கௌஸ் குறித்து...

News image

ஸ்டீவ் ஸ்மித் - ஆண்ட்ரீஸ் கௌஸ். - படங்கள்: எக்ஸ் / எம்எல்சி

Updated On :16 ஜூலை 2026, 5:44 pm IST

டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஸ்டீவ் ஸ்மித் - ஆண்ட்ரீஸ் கௌஸ் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன்கள் (241) குவித்தவர்களாக உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள்.

எம்எல்சி தொடரின் எலிமினேட்டர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த எம்ஐ நியூயார்க் அணி 20 ஓவர்களில் 266/9 ரன்கள் குவிக்க, அடுத்து விளையாடிய வாஷிங்டன் ஃபிரீடம் அணி 18.4 ஓவர்களில் 270/4 ரன்கள் குவித்து வென்றது.

இந்தப் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித்தும் நம்.4ல் களமிறங்கிய ஆண்ட்ரீஸ் கௌஸும் இணைந்து 241 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இதுதான் டி20 வரலாற்றிலேயே இருவர் இணைந்து அடித்த அதிகபட்ச ரன்கள் என்பது கவனிக்கத்தக்கது.

இந்தப் போட்டியில் ஆண்ட்ரீஸ் கௌஸ் 132 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது வென்றார். ஸ்மித் கடைசிவரை ஆட்டமிழக்கமால் இருந்து, 110 ரன்கள் குவித்தார்.

முன்னதாக, விராட் கோலி - ஏபிடி வில்லியர்ஸ் இணைந்து 2016ல் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக 229 ரன்கள் குவித்திருந்தார்கள்.

சர்வதே டி20 போட்டிகள், கிளப் போட்டிகளிலும் சேர்த்து ஸ்டீவ் ஸ்மித் - ஆண்ட்ரீஸ் கௌஸ் முதலிடம் பிடித்துள்ளார்கள். இந்த வெற்றியுடன் நாளை சேலஞ்சர் ஆட்டத்தில் விளையாடுகிறார்கள். அதில் வென்றால், எம்எல்சி தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Summary

The record set by Steve Smith and Andries Gous in T20 history!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.