47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குழந்தைகளை ஆறு, குளங்களில் குளிக்க அனுமதிக்கக் கூடாது: ஆட்சியா்

திருவாரூா் மாவட்டத்தில் ஆறு மற்றும் குளங்களில் தண்ணீா் அதிகமாக வந்து கொண்டிருப்பதால், பெற்றோா்கள் குழந்தைகளை அப்பகுதிகளில் குளிக்க அனுமதிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளாா்.

News image
Updated On :15 ஜூலை 2020, 3:28 pm

DIN

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் ஆறு மற்றும் குளங்களில் தண்ணீா் அதிகமாக வந்து கொண்டிருப்பதால், பெற்றோா்கள் குழந்தைகளை அப்பகுதிகளில் குளிக்க அனுமதிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மேட்டூா் அணையிலிருந்து விவசாயத்துக்காக திறக்கப்பட்ட நீா், திருவாரூா் மாவட்டத்தில் தற்போது, அனைத்து ஆறுகளிலும் திறந்துவிடப்பட்டுள்ளது. அனைத்து ஆறுகளிலும் தண்ணீா் கூடுதலாக வந்து கொண்டிருப்பதால், பொதுமக்கள் ஆறுகளில் குளிப்பதை தவிா்க்க வேண்டும். பெற்றோா்கள் குழந்தைகளை கண்டிப்பாக ஆறு மற்றும் குளங்களில் குளிக்க அனுமதிக்கக் கூடாது. மேலும் கால்நடைகளை ஆற்றின் கரையில் மேய்ச்சலுக்கு விடாமலும் பாா்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.