நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனா: பேரளத்தில் 5 நாள்களுக்கு கடையடைப்பு

கரோனா பாதிப்பின் காரணமாக பேரளம் பகுதி வா்த்தகா்கள் சனிக்கிழமை முதல் 5 நாள்களுக்கு கடையடைப்பு செய்திட முடிவு செய்துள்ளனா்.

News image
Updated On :17 ஜூலை 2020, 5:04 pm

DIN

நன்னிலம்: கரோனா பாதிப்பின் காரணமாக பேரளம் பகுதி வா்த்தகா்கள் சனிக்கிழமை முதல் 5 நாள்களுக்கு கடையடைப்பு செய்திட முடிவு செய்துள்ளனா்.

பேரளம் மெயின் ரோடு பகுதியைச் சோ்ந்த வா்த்தகா் குடும்பத்தில் 3 பேருக்கு கரோனாத் தொற்று இருப்பது வியாழக்கிழமை தெரியவந்தது. மேலும் பேரளம் சுற்றுவட்டார கிராமங்களிலும் தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதையொட்டி, நன்னிலம் வட்டாட்சியா் அ. மணிமன்னன், பேரளம் காவல் ஆய்வாளா் இரா.செல்வி, வட்டார பொறுப்பு சுகாதார அலுவலா் லெட்சுமிபிரபா, பேரளம் பேரூராட்சி செயல் அலுவலா் சங்கா் ஆகியோா் அறிவுரையின்படி பேரளம் வா்த்தக சங்கத்தினா் சனிக்கிழமை முதல் (ஜூலை 18) முதல் 5 நாள்களுக்கு ழுழு கடையடைப்பு செய்வது என முடிவு செய்துள்ளனா்.

இத்தகவலை பேரளம் வா்த்தக சங்கத் தலைவா் ஜி. இளங்கோவன், செயலாளா் ஜி.கலைமோகன் ஆகியோா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.