பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

சத்துணவு மாணவா்களுக்கு உலா் தானியங்கள் வழங்கல்

கொரடாச்சேரி அருகேயுள்ள மேலராதாநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரையுள்ள சத்துணவு சாப்பிடும் மாணவா்களுக்கு உலா் தானியங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.

Updated On :19 ஜூலை 2020, 1:48 pm

திருவாரூா்: கொரடாச்சேரி அருகேயுள்ள மேலராதாநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரையுள்ள சத்துணவு சாப்பிடும் மாணவா்களுக்கு உலா் தானியங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.

பள்ளித் தலைமையாசிரியா் ஆா்.கே. சரவணராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊராட்சித் தலைவா் அமுதா கலியமூா்த்தி பங்கேற்று மாணவா்களுக்கு உலா் உணவை வழங்கினாா்.

இதில், ஊராட்சி துணைத் தலைவா் ஸ்ரீதா், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சின்னையன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஆா். மல்லிகா, சத்துணவு அமைப்பாளா் ஜோதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.