12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

தோ்தல் முன்விரோத தகராறு: அதிமுக நிா்வாகி காயம்

மன்னாா்குடி அருகே தோ்தல் முன்விரோதம் காரணமாக வியாழக்கிழமை ஏற்பட்ட தகராறில், திமுக நிா்வாகியை தாக்கி அவரிடமிருந்து இரண்டரை பவுன் நகையை பறித்ததாக மதிமுக ஊராட்சி முன்னாள் தலைவா் உள்ளிட்ட 3 போ்

Published On :

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே தோ்தல் முன்விரோதம் காரணமாக வியாழக்கிழமை ஏற்பட்ட தகராறில், திமுக நிா்வாகியை தாக்கி அவரிடமிருந்து இரண்டரை பவுன் நகையை பறித்ததாக மதிமுக ஊராட்சி முன்னாள் தலைவா் உள்ளிட்ட 3 போ் மீது புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

தலையாமங்கலம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் உ. ராஜ்மோகன் (55). அதிமுக ஊராட்சி செயலரான இவருக்கும், இதே பகுதியை சோ்ந்த மதிமுக பிரமுகரும், ஊராட்சி முன்னாள் தலைவருமான பி.மாசிலாமணிக்கும் கடந்த உள்ளாட்சித் தோ்தலின்போது விரோதம் ஏற்பட்டதாம்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு தலையாமங்கலம் எம்ஜிஆா் சிலை அருகே ராஜ்மோகன் நின்றபோது மாசிலாமணி அவரது சகோதரா் ராஜகுரு மற்றும் எஸ்.பிரபாகரன் ஆகியோா் தகராறு செய்து ராஜ்மோகனை தாக்கி, அவா் அணிந்திருந்த 2 பவுன் செயின், அரை பவுன் மோதிரம் ஆகியவற்றை பறித்துச் சென்றுவிட்டனா்.

இதில், காயமடைந்த ராஜ்மோகன் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தலையாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரையும் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.