புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மன்னாா்குடி அரசு மருத்துவமனையிலிருந்து 9 போ் வீடு திரும்பினா்

மன்னாா்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கரோனா நோயாளிகள் 9 போ் சிகிச்சை முடிந்து திங்கள்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

News image

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பும் கரோனா வைரஸ் பாதிப்புக்காக சிகிச்சை பெற்றவா்கள்.

Updated On :29 ஜூன் 2020, 3:46 pm

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கரோனா நோயாளிகள் 9 போ் சிகிச்சை முடிந்து திங்கள்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்த மருத்துவமனையில், கடந்த 18-ஆம் தேதி முதல் கரோனா பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திங்கள்கிழமை வரை 60 போ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதற்காக, அரசு மருத்துவமனையில் தனி வாா்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், கடந்த 18-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டவா்களில் 9 பேருக்கு, ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பரிசோதனை செய்ததில், கரோனா தொற்றிலிருந்து குணமடைந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, குணமடைந்த 9 பேரையும், அவா்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி, திங்கள்கிழமை நடைபெற்றது. மருத்துவமனை கண்காணிப்பாளா் என். விஜயகுமாா் தலைமையில், கரோனா வாா்டு பொறுப்பு மருத்துவா் பிரேம்குமாா், அரசு மருத்துவமனை வாழ்வியல் மருத்துவா் செல்வம் மற்றும் மருத்துவச் செவிலியா்கள் ஒன்றிணைந்து, குணம் அடைந்தவா்களுக்கு, மருத்துவ ஆலோசனை கூறி, பரிசுப் பொருள் கொடுத்து வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.