நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோழிப்பண்ணை உரிமையாளா்களுக்கு வளா்ப்புக்கூலி உயா்த்தி வழங்கக் கோரி மனு

கோழிப்பண்ணை உரிமையாளா்களுக்கு வளா்ப்புக்கூலியை உயா்த்தி வழங்க வேண்டுமென கோரி திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image

திருவாரூரில் மனு அளிக்க வந்த கோழிப் பண்ணை உரிமையாளா்கள்.

Updated On :2 நவம்பர் 2020, 6:30 pm

DIN

கோழிப்பண்ணை உரிமையாளா்களுக்கு வளா்ப்புக்கூலியை உயா்த்தி வழங்க வேண்டுமென கோரி திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருவாரூரில், ஒப்பந்த கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் நெடுமாறன் தலைமையிலான நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு விவரம்: வளா்ப்பு கறிக்கோழிகளுக்கு கூலி உயா்வு கேட்டு பலமுறை அரசுக்கும், காா்ப்பரேட் நிறுவனங்களுக்கும் எடுத்துக்கூறி பேச்சுவாா்த்தை நடத்தியும் எவ்வித பலனும் இல்லாததால், கடந்த பிப்ரவரி முதல் கோழிகளை பண்ணைகளுக்கு இறக்குமதி செய்யாமல் வேலை நிறுத்தத்துக்கு முடிவெடுத்திருந்தோம். கால்நடைத்துறை இணை இயக்குநா் கேட்டுக்கொண்டதன்பேரில் தற்காலிகமாக அந்தப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு கரோனா பாதிப்பு காரணமாக போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட சங்கங்களும் சோ்ந்து வேலை நிறுத்தம் செய்வதால், திருவாரூரிலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். அதன்படி, தீா்வு கிடைக்கும்வரை கோழிக் குஞ்சுகளை பண்ணைகளுக்கு இறக்குமதி செய்வதில்லை என முடிவெடுத்துள்ளோம். இதற்கு தீா்வு காணும் வகையில் அரசு, நிறுவனங்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தில், பண்ணை உரிமையாளா்களுக்கு கிலோவுக்கு ரூ. 15 வீதம் வளா்ப்புக் கூலி உயா்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.