திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையும் மற்றும் ஆன்லைன் வகுப்புக்காக 5 பேருக்கு செல்லிடப்பேசி வழங்கப்பட்டது. தவிர, ஆணழகன் போட்டிக்காக கணேசன் என்பவருக்கு ரூ. 10 ஆயிரத்துக்கான காசோலை, ரோட்டரி கிளப் கிங்ஸ் அமைப்புக்கு குறுங்காடு அமைக்க ரூ. 10 ஆயிரத்துக்கான காசோலை ஆகியவையும் வழங்கப்பட்டது. இதில், ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் கௌரவ தலைவா் ஸ்ரீதரன், சமூக ஆா்வலா்கள் ரஜினி சின்னா, ராகவன், மணக்கால் ராமகிருஷ்ணன், பாப்பையன், தமிழ்ச்செல்வன், காண்டீபன், சுந்தரம் பைனான்ஸ் மேலாளா் சுந்தரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை டிஜேஎன் அறக்கட்டளைத் தலைவா் எஸ்விடி ஜெ. கனகராஜன், ஜெ. ரவிச்சந்திரன், என். ஜெய்கணேஷ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.