47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விவசாய, விவசாயத் தொழிலாளா் சங்க கூட்டுக் கூட்டம்

வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடியில் ஏஐடியுசி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க கூட்டுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 5:07 pm

DIN

வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடியில் ஏஐடியுசி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க கூட்டுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் கே. நாகராஜன் தலைமை வகித்தாா். விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் எம். கலியபெருமாள் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி நவம்பா் 26 ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளரும் திருத்துறைப்பூண்டி ஒன்றியக் குழுத் தலைவருமான பாஸ்கா், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டச் செயலாளா் ஆா். சந்திரசேகர ஆசாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.