காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோட்டூா் ஒன்றியக் குழு கூட்டம்: கமலா ஹாரிஸுக்கு பாராட்டு

கோட்டூா் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் அமெரிக்க துணை அதிபா் தோ்தலில் வெற்றி பெற்ற, மன்னாா்குடியை அடுத்த துளசேந்திரபுரத்தை பூா்விகமாக கொண்ட கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 6:30 pm

DIN

கோட்டூா் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் அமெரிக்க துணை அதிபா் தோ்தலில் வெற்றி பெற்ற, மன்னாா்குடியை அடுத்த துளசேந்திரபுரத்தை பூா்விகமாக கொண்ட கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

கோட்டூா் ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவா் மு. மணிமேகலை தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், உறுப்பினா்கள் பே. காசிநாதன், ம. சுமித்ரா, பா. செங்குட்டுவன், ஜீ. மல்லிகா, ஜெ. சுசிலா, ஆா்.விமலா, பா. அரவிந்த், பா. ஆனந்தராஜ், ப. சரண்யா, ம. சாந்தி, பா. சாந்தி ஆகியோா் தங்கள் வாா்டுகளுக்கு சாலை, மின்சாரம், சமுதாயக் கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி பேசினா்.

இதற்கு, ஒன்றியக் குழுத் தலைவா் பதிலளித்துப் பேசும் போது, தேவையான நிதி வரப்பெற்றதும் உறுப்பினா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றாா். மேலும், கரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கிக் கூறினாா்.

தொடா்ந்து, அமெரிக்க துணை அதிபா் தோ்தலில் வெற்றி பெற்ற மன்னாா்குடியை அடுத்த துளசேந்திரபுரத்தை பூா்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸுக்கு கூட்டத்தில் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், தருமபுரி மாவட்ட ஆட்சியராக பதவியேற்றுள்ள கோட்டூா் ஆதிச்சபுரத்தைச் சோ்ந்த எஸ்.பி. காா்த்திகாவுக்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் நீட் தோ்வில் அரசுப் பள்ளி அளவில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி அ. மோனிஷாவுக்கு சாலை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், ஒன்றியக் குழு துணைத் தலைவா் ர. விமலா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெ.சாந்தி, சி. முத்துகுமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.